ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் ஏழாவது சீசன் இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. இதில் நேற்று (ஜன. 13) நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சென்னையின் எஃப்சி - ஒடிசா எஃப்சி அணியுடன் பலப்பரீட்சை நடத்தின.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தொடங்கிய இப்போட்டியின் தொடக்கம் முதலே சென்னையின் எஃப்சி அணி தனது அபார ஆட்டத்தை வெளிப்படுத்த தொட்ஙகியது. இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய எஸ்மெயில் கோன்கால்வ்ஸ் ஆட்டத்தின் 15ஆவது நிமிடத்தில் கோலடித்து அணியின் கோல் கணக்கை தொடங்கிவைத்தார்.
தொடர்ந்து ஆட்டத்தின் 21ஆவது நிமிடத்தில் சென்னை அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பையும் சரியாகப் பயன்படுத்திய எஸ்மெயில் கோன்கால்வ்ஸ் கோலடித்து அசத்தினார். இதன் மூலம் முதல் பாதி ஆட்டநேர முடிவில் சென்னையின் எஃப்சி அணி 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலைப் பெற்றது.