ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் ஏழாவது சீசன் கோலாகலமாக நடைபெற்றுவருகிறது.
இதில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஹைதராபாத் எஃப்சி அணி 1-0 என்ற கோல் கணக்கில் ஒடிசா எஃப்சியை வீழ்த்தி, இந்த சீசனை வெற்றியுடன் தொடங்கியுள்ளது.
இந்நிலையில் இன்று நடைபெறும் ஐந்தாவது லீக் போட்டியில் சென்னையின் எஃப்சி அணி - ஜாம்ஷெட்பூர் எஃப்சி அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. வாஸ்கோவிலுள்ள திலக் மைதன் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.
சென்னையின் எஃப்சி:
ஐஎஸ்எல் தொடர் வரலாற்றில் சென்னையின் எஃப்சி அணி இரண்டு முறை கோப்பையை வென்றுள்ளது. மேலும் கடந்த ஐஎஸ்எல் சீசனில் சென்னையின் எஃப்சி அணி இறுதிப்போட்டி வரை முன்னேறி, நூலிழையில் கோப்பையை தவறவிட்டிருந்தது.