இந்தியாவின் உள்ளூர் கால்பந்து திருவிழாவான ஐஎஸ்எல் தொடரின் ஏழாவது சீசன் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று (ஜன.29) நடைபெற்ற லீக் ஆட்டத்தில் எஃப்சி கோவா அணி ஈஸ்ட் பெங்கால் அணியை எதிர்கொண்டது.
பெரும் எதிர்பார்ப்புடன் தொடங்கிய இப்போட்டியின் முதல் பாதி ஆட்டத்தில் கோவா எணி தனது ஆதிக்கத்தை வெளிப்படுத்தியது. இதன் மூலம் ஆட்டத்தின் 39ஆவது நிமிடத்தில் நட்சத்திர வீரர் இகோர் அங்குலோ மூலம் அந்த அணிக்கு ஒரு கோல் கிடைத்து. முதல் பாதி ஆட்டநேர முடிவிலும் கோவா அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையையும் பெற்றது.
தொடர்ந்து நடைபெற்ற இரண்டாம் பாதி ஆட்டத்தில், சுதாரித்து ஆடிய ஈஸ்ட் பெங்கால் அணிக்கு, ஆட்டத்தின் 65ஆவது நிமிடத்தில் டேனி ஃபாக்ஸ் கோலடித்து அணியை தோல்வியிலிருந்து மீட்டார். தொடர்ந்து இரு அணி வீரர்களும் வலிமையான டிஃபென்ஸை வெளிப்படுத்த, அதன் பின் யாரும் கோலடிக்க வில்லை.
இதனால் ஆட்டநேர முடிவில் இரு அணிகளும் தலா ஒரு கோல் என்ற கணக்கில் சமநிலையில் இருந்ததால், ஆட்டம் டிராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் ஐஎஸ்எல் புள்ளிப்பட்டியலில் 21 புள்ளிகளுடன் எஃப்சி கோவா அணி மூன்றாமிடத்தையும், 13 புள்ளிகளுடன் ஈஸ்ட் பெங்கால் அணி 10ஆவது இடத்தையும் பிடித்துள்ளன.
இதையும் படிங்க:டெஸ்ட் கிரிக்கெட்டில் 200 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார் ரபாடா!