இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) தொடரின் ஆறாவது சீசனுக்கான போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகின்றன. இதில், நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் முன்னாள் சாம்பியன் ஏ.டி.கே (கொல்கத்தா) அணி, எஃப்சி கோவா அணியை எதிர்கொண்டது. முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்க தவறியதால், இரண்டாம் பாதி ஆட்டத்தில் கோல் அடிக்கும் முயற்சியில் இரு அணிகளும் களமிறங்கியது.
குறிப்பாக, 60ஆவது நிமிடத்தில் கோவா வீரர் மொர்டாடா கோல் அடித்து அணிக்கு முன்னிலைப் பெற்றுத் தர, 64ஆவது நிமிடத்தில் கொல்கத்தா வீரர் ஜஸ்டின் கோல் அடித்து பதிலடி தந்தார். அடுத்த இரண்டு நிமிடங்களிலேயே கோவா வீரர் ஃபரொன் அசத்தலான கோல் அடிக்க, கொல்கத்தா ரசிகர்களின் கொண்டாட்டம் அமைதியானது.