இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் ஆறாவது சீசனுக்கான போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகின்றன. இதில், ஒடிசா தலைநகர் புபனேஷ்வரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில், ஒடிசா எஃப்சி - மும்பை சிட்டி எஃப்சி அணிகள் மோதின. இப்போட்டியில் மும்பை அணியின் டிஃபெண்டர்கள் மிகவும் மோசமாக செயல்பட்டதால் அதை பயன்படுத்தி ஒடிசா அணி கோல் அடிக்கும் முயற்சியில் ஈடுபட்டது.
ஆட்டத்தின் 47ஆவது நிமிடத்தில் ஒடிசா வீரர் சிஸ்கோ பந்தை மும்பை அணியின் டிஃபெண்டர்களை லாவகமாக கடத்திச் சென்று தந்த பாஸை, சக வீரர் அரிடேன் சண்டனா கோலாக்கி அணிக்கு முன்னிலை பெற்றுத் தந்தார். இதைத்தொடர்ந்து, 74ஆவது நிமிடத்தில் ஒடிசா அணிக்கு கிடைத்த த்ரோ பாலை, மும்பை வீரர்கள் தடுக்க தவறியதால், அந்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்திக்கொண்டு ஒடிசா வீரர் சிஸ்கோ மிரட்டலான கோல் அடித்தார்.