தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ஐஎஸ்எல் 20-21: கரோனா ஊரடங்கிற்கு பின் இந்தியாவின் முதல் பெரிய தொடர்! - ஐஎஸ்எல் 20-21 செய்திகள்

இந்தியன் சூப்பர் லீக் எனப்படும் இந்தியாவின் மிகப்பெரிய கால்பந்து தொடரின் ஏழாவது சீசன் நாளை (நவ. 20) முதல் தொடங்குகிறது.

isl-2020-21-indias-first-major-tournament-since-covid-19-lockdown-set-for-kick-off
isl-2020-21-indias-first-major-tournament-since-covid-19-lockdown-set-for-kick-off

By

Published : Nov 19, 2020, 7:29 PM IST

இந்தியாவில் கிரிக்கெட் போட்டிகளைத் தொடர்ந்து பிற விளையாட்டுப் போட்டிகளை ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு விளையாட்டுத் தொடர்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி கால்பந்து வீரர்களை ஊக்குவிக்கும் விதாமாக 2013ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்தியன் சூப்பர் லீக் தொடரின் ஏழாவது சீசன் நாளை முதல் தொடங்கவுள்ளது.

கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டு ஐஎஸ்எல் தொடர் முழுவதும் கோவாவில் உள்ள மூன்று மைதானங்களில் மட்டும், பார்வையாளர்களின்றி நடத்த ஐஎஸ்எல் கூட்டமைப்பு திட்டமிட்டுள்ளது. மேலும் இந்த ஆண்டு கொல்கத்தாவை தலைமையிடமாக கொண்ட ஈஸ்ட் பெங்கால் என்ற புதிய அணிக்கும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதனால் இந்த சீசனில் மொத்தம் 11 அணிகள் பங்கேற்கவுள்ளன.

அதேசமயம் நடப்பு சாம்பியனான ஏடிகே அணி, ஐ - லீக் சாம்பியன் மோகன் பாகன் அணியுடன் கைக்கோர்த்து இந்த சீசனை எதிர்கொள்ளவுள்ளது. ஐஎஸ்எல் அணிகள் பெரும்பாலும் தங்களது பயிற்சியாளர்கள், வீரர்களை மாற்றியுள்ளதால், இந்தாண்டு ஐஎஸ்எல் சீசன் மீதான எதிர்பார்ப்பு பண்மடங்கு அதிகரித்துள்ளது.

இதில் பங்கேற்கும் அணிகள் அனைத்தும் ஏ, பி, சி என மூன்று குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன. மொத்தம் 115 லீக் போட்டிகள் அடங்கிய இத்தொடரானது இம்மாதம் முதல் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை நடைபெறும் முதல் போட்டியில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணி நடப்பு சாம்பியனான ஏடிகே மோகன் பாகன் அணியுடன் மோதவுள்ளது. பாம்போலியம் ஜி.எம்.சி தடகள மைதானத்தில் பார்வையாளர்களின்றி நடைபெறும் இப்போட்டி இரவு 7.30 மணிக்கு தொடங்கவுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details