தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ஐ.எஸ்.எல். கால்பந்து: சொந்த மண்ணில் ஒடிசாவை காலி செய்த நார்த் ஈஸ்ட் யுனைடெட் - North east united fc beats odissa fc

ஐ.எஸ்.எல். கால்பந்து ஆறாவது சீசனின் இன்றைய லீக் ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் எஃப்.சி. அணி ஒடிசா எஃப்.சி. அணியை வீழ்த்தியது.

isl

By

Published : Oct 26, 2019, 10:14 PM IST

இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரின் ஆறாவது சீசன் நடைபெற்றுவருகிறது. இந்த சீசனின் ஏழாவது லீக் போட்டியில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் எஃப்.சி. - ஒடிசா எஃப்.சி. அணிகள் மோதின. இரு அணிகளுக்கும் இது இரண்டாவது போட்டியாகும். முன்னதாக பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் நார்த் ஈஸ்ட் அணி டிராவும், ஜம்ஷெட்பூர் அணியிடம் ஒடிசா அணி தோல்வியும் அடைந்திருந்தன. இதனால் இரு அணிகளும் முதல் வெற்றியைப் பதிவு செய்யும் முனைப்பில் களமிறங்கின.

அஸ்ஸாம் தலைநகர் கவுகாத்தி இந்திரா காந்தி மைதானத்தில் இப்போட்டி நடைபெற்றது. ஆட்டம் தொடங்கிய இரண்டாவது நிமிடத்திலேயே நார்த் ஈஸ்ட் யுனைடெட் வீரர் ரெடீம் லாங் கோல் அடித்தார். அதைத் தொடர்ந்து ஒடிசா வீரர்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அவர்களின் கோல் அடிக்கும் முயற்சியை நார்த் ஈஸ்ட் அணியின் கோல் கீப்பர் லாவகமாகத் தடுத்தார்.

நார்த் ஈஸ்ட் யுனைடெட் எஃப்.சி. அணி

முதல் பாதியில் நார்த் ஈஸ்ட் அணி 1-0 என முன்னிலை வகித்தாலும் இரண்டாவது பாதியின் 71ஆவது நிமிடத்தில் கோல் அடித்து தனது அணியை சமநிலை பெறவைத்தார். இருப்பினும் அடுத்த நிமிடத்திலேயே ஒடிசா வீரர் கார்லஸ் டெல்காடோவிற்கு ரெட் கார்ட் அளிக்கப்பட்டதால் அவர் போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டார். இதனால் ஒடிசா அணி 10 வீரர்களுடன் விளையாடும் நிலைக்குத் தள்ளப்பட்டது.

பின்னர் இறுதியில் ஆட்டம் முடிய சில நிமிடங்கள் மட்டும் இருந்தவேளையில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியின் அசாமோவா கியான் 84ஆவது நிமிடத்தில் கோல் அடித்தார். இதனால் நார்த் ஈஸ்ட் அணி 2-0 என்ற கோல் கணக்கில் ஒடிசாவை வீழ்த்தி நான்கு புள்ளிகளுடன் முதலிடத்திற்கு முன்னேறியது.

சொந்த மண்ணில் நார்த் ஈஸ்ட் அணி பெறும் எட்டாவது வெற்றி இது என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

ABOUT THE AUTHOR

...view details