இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரின் ஆறாவது சீசனில் இன்று நடைபெற்றுவரும் லீக் போட்டியில் சென்னையின் எஃப்.சி. - அத்லெடிக்கோ கொல்கத்தா அணிகள் விளையாடிவருகின்றன. சென்னை அணி இந்த சீசனில் விளையாடிய இரண்டு போட்டிகளில் ஒரு தோல்வி, ஒரு டிரா மட்டும் செய்து இன்னும் ஒரு வெற்றியைக்கூட பதிவு செய்யாமல் உள்ளது.
சென்னை அணி கடைசியாக கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மும்பை அணிக்கு எதிரான போட்டியை டிரா செய்திருந்தது. அதைத் தொடர்ந்து அந்த அணி மீண்டும் இன்று சென்னையில் உள்ளூர் ரசிகர்கள் முன்னிலையில் களமிறங்கியது. இதனால் இப்போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.