தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

நூலிழையில் பறிபோன சென்னை அணியின் வெற்றி! - ஐஎஸ்எல் காலபந்து போட்டியின் லீக்

ஐஎஸ்எல் கால்பந்து போட்டியின் லீக் ஆட்டத்தில் சென்னையின் எஃப்சி அணியும் ஜாம்சத்பூர் அணியும் மோதிய ஆட்டம் சமனில் முடிவடைந்தது.

ISL 2019-20:
ISL 2019-20:

By

Published : Dec 9, 2019, 11:51 PM IST

ஐஎஸ்எல் எனப்படும் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சென்னையின் எஃப்சி அணி, ஜாம்சத்பூர் அணியை எதிர்கொண்டது.

பரபரப்பாக தொடங்கிய இந்திய ஆட்டத்தின் 26’ ஆவது நிமிடத்தில் சென்னை அணியின் நெரிஜுஸ் கோலடித்து அசத்தினார். இதன் மூலம் சென்னையின் எஃப்சி அணி முதல் பாதி, ஆட்டநேர முடிவில் 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றது.

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாம் பாதி ஆட்டத்தில், தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜாம்சத்பூர், ஆட்டத்தின் இறுதி நிமிடத்தில் கோலடித்து சென்னை அணியின் வெற்றிக் கனவை கலைத்தது.

இதன் மூலம் இந்த ஆட்டத்தில் 1-1 என்ற கணக்கில் ஜாம்சத்பூர் அணி சென்னையின் எஃப்சி அணியுடன் ஆட்டத்தைப் பகிர்ந்து கொண்டது.

இதையும் படிங்க:தெற்காசிய போட்டிகள் 2019 - 200க்கும் மேற்பட்ட பதக்கங்களை வென்ற இந்தியா!

ABOUT THE AUTHOR

...view details