தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

உலகக்கோப்பைக் கால்பந்து தகுதிச்சுற்று: கத்தாரை எதிர்கொள்ளும் இந்தியா! - கத்தாரை எதிர்கொள்ளும் இந்தியா

2022ஆம் ஆண்டுக்கான ஃபிஃபா உலகக்கோப்பைக் கால்பந்து தொடருக்கான தகுதிச்சுற்றில் கத்தார் அணியை அக்.8ஆம் தேதி இந்திய அணி எதிர்கொள்ளவுள்ளது.

indias-2022-fifa-world-cup-qualifying-round-match-against-qatar-rescheduled-to-october-8
indias-2022-fifa-world-cup-qualifying-round-match-against-qatar-rescheduled-to-october-8

By

Published : Jun 6, 2020, 8:39 PM IST

2022ஆம் ஆண்டு ஃபிஃபா உலகக்கோப்பைக் கால்பந்து தொடருக்கான தகுதிச்சுற்றுப் போட்டிகள் மார்ச் 26ஆம் தேதி நடைபெறவிருந்தது. ஆனால் கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்த போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டன.

இந்நிலையில் ஒத்தி வைக்கப்பட்ட போட்டிகள் மீண்டும் எப்போது நடக்கும் என்ற தேதிகள் இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது. உலகக்கோப்பைத் தகுதிச்சுற்று போட்டியில் கத்தார் அணியை எதிர்த்து இந்தி்யா ஆடவுள்ள போட்டி அக்.8ஆம் தேதி நடக்கும் எனவும், வங்கதேசம் - இந்தியா ஆடும் போட்டி நவ.12ஆம் தேதியும், இந்தியா - ஆஃப்கானிஸ்தான் ஆடும் போட்டி நவ.17ஆம் தேதி நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

2023 ஏஎஃப்சி ஆசி்ய கோப்பை , உலகக்கோப்பை தகுதிச்சுற்று போட்டிகள் ஆகியவற்றுக்கான புதிய தேதிகளை இந்திய கால்பந்து சம்மேளனம் உறுதி செய்ய வேண்டும் என ஆசிய கால்பந்து சம்மேளனம் தெரிவித்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details