தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

#SAFFU15WomensChampionship: முதல் போட்டியிலேயே கெத்து காட்டிய இந்திய கால்பந்து அணி! - இந்திய

15 வயது உட்பட்டோருக்கான மகளிர் தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில், இந்திய அணி, நேபாளத்தை வீழ்த்தியது.

India

By

Published : Oct 10, 2019, 5:22 PM IST

தெற்காசிய கால்பந்து சம்மேளனம் சார்பில் 15 வயது உட்பட்டோருக்கான மகளிர் தெற்காசிய சாம்பியன்ஷிப் தொடர் பூடானில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, நேபாளம், வங்கதேசம், பூடான் ஆகிய நான்கு அணிகள் பங்கேற்கின்றன.

இதில், ஒவ்வொரு அணியும் மற்ற மூன்று அணிகளுடன் மோதும். இறுதியில், புள்ளிப்பட்டியலில் முதலிரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் இறுதிச் சுற்றுக்கு முன்னேறும். இந்நிலையில், நேற்று தொடங்கிய இந்தத் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி, நேபளாம் அணியைச் சந்தித்து.

ஆட்டம் தொடங்கியவுடனே இந்திய அணி வீராங்கனைகள் சிறப்பான ஆட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக, இந்திய வீராங்கனை சுமதி குமாரி 7ஆவது நிமிடத்திலேயே நேபாளம் அணியின் தடுப்பு வீராங்கனைகளைக் கடந்து சிறப்பான கோல் அடித்தார்.

அதன் பிறகு 38ஆவது நிமிடத்தில் சுமதி குமாரி தந்த பாஸால், அசிஸ்ட்டால் லின்டா கோம் செர்டா கோலடித்து மிரட்டியதால் இந்திய அணி முதல் பாதி முடிவில் 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது.

இதையடுத்து, நடைபெற்ற இரண்டாம் பாதியிலும் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தியது. 56ஆவது நிமிடத்தில் மீண்டும் லின்டா கோம் செர்டா கோலடித்து அசத்தினார். அதன்பிறகு, நேபாளம் அணி 62 ஆவது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தாலும், அவர்களது கொண்டாட்டம் நீடிக்கவில்லை. ஏனெனில், இந்திய வீராங்கனை பிரியங்கா சுஜேஷ் 66ஆவது நிமிடத்தில் எளிதாக கோலடித்தார். இதனால், இந்திய அணி 4-1 என்ற கோல் கணக்கில் இப்போட்டியில் வெற்றிபெற்றது.

இதையும் படிங்க:

#RolexShMasters: அடுத்த கோப்பைக்குத் தயாரான ஜோகோவிச்!

ABOUT THE AUTHOR

...view details