தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ஐஎஸ்எல்: ஏடிகேவின் வெற்றியில் இந்திய வீரர்களின் பங்கு! - ஐஎஸ்எல்

ஆறாவது சீசனுக்கான ஐஎஸ்எல் கால்பந்து தொடர் பட்டத்தை மூன்றாவது முறையாக வென்ற ஏடிகே அணியின் வெற்றிக்கு இந்திய வீரர்களின் பங்கு என்ன என்பதைப் பற்றி பார்க்கலாம்.

indian-players-hands-behind-atk-success-story-in-isl
indian-players-hands-behind-atk-success-story-in-isl

By

Published : Mar 16, 2020, 10:50 AM IST

6ஆவது சீசனுக்கான இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் ஏடிகே அணி 3-1 என்ற கணக்கில் சென்னையன் அணியை வீழ்த்தி மூன்றாவது முறையாகச் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளது. இவர்களின் வெற்றிக்கு ஜாவி ஹெர்னாண்டஸ், எடு கார்சியா, ராய் கிருஷ்ணா, டேவிட் வில்லியம்ஸ் ஆகியோரைக் கடந்து சில இந்திய வீரர்களின் பெயர்கள் இந்திய செய்திகளில் இடம்பெறவில்லை.

நமது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைப் போலவே உள்ளூர் வீரர்களை வாழவைக்காமல் வெளிநாட்டு வீரர்களை மட்டும் வைத்து இந்த வெற்றியை ஏடிகே வசப்படுத்தவில்லை. சில இந்திய வீரர்களின் அசாத்தியமான செயல்பாடுகளாலும் தான் ஏடிகே அணிக்கு மூன்றாவது முறையாகச் சாம்பியன் பட்டம் வசப்பட்டுள்ளது.

பிரீத்தம் கோடல், பிரனே ஹால்டர், பிரபிர் தாஸ், சுமித் ரதி, மைக்கேல் சூசைராஜ் ஆகியோர் ஏடிகேவின் வெற்றிக்கு முதன்மையான காரணங்கள். 26 வயதாகும் பிரீத்தம், 2015ஆம் ஆண்டு ஐ லீக் கால்பந்து தொடரில் பட்டம் வென்ற மோகன் பகன் அணியில் ஆடியவர். ஏடிகே அணியின் மூன்று டிஃபெண்டர்களில் மிகவும் முக்கியமானவர்.

இந்த சீசன் குறித்து இவர் பேசுகையில், ''பட்டத்தை வென்றது நல்ல உணர்வாக உள்ளது. எங்கள் அணிக்குள் ஆரோக்கியமான போட்டி நிலவுவதும், சரியான அணியுடன் களமிறங்கியது எங்களின் வெற்றிக்கு காரணம். ட்ரெஸிங் ரூம் சூழல் சிறப்பாக இருந்தது. ஒவ்வொரு வீரரும் மற்ற வீரர்களின் வெற்றியைக் கொண்டாடினோம்.

பயிற்சியாளர்கள் அனைவரும் எங்கள் மீது எந்த அழுத்தமும் ஏற்படுத்தவில்லை. நாங்கள் தோல்வியடைந்தாலும் அணி நிர்வாகம் எங்களை நம்பியது. அடுத்தத் தொடரில் மோகன் பகன் அணியும், ஏடிகே அணியும் ஐஎஸ்எல் தொடருக்காக இணையவுள்ளார்கள். அதனால் அடுத்தத் தொடரை ஆடுவதற்கு மிகவும் ஆர்வமாக உள்ளேன்'' என்றார்.

ஹால்டர்

இதேபோல் இந்தத் தொடர் பற்றி ஹால்டர் பேசுகையில், ''தொடரின் ஆரம்பத்தில் காயம் காரணமாகச் சில போட்டிகளை மிஸ் செய்தேன். இந்த வெற்றிக்கு அணியில் இருக்கும் அனைவரும் மிக முக்கிய காரணம். களத்திற்கு வெளியேவும், உள்ளேயும் அணிக்கு நாங்கள் தேவைப்பட்டால் சரியான நேரத்தில் அனைவரும் முன்வந்தார்கள்.

குழுவாகச் செயல்பட்டதன் விளைவுதான் இந்த வெற்றி. இந்தச் சீசனோடு எனது ஒப்பந்தம் ஏடிகே அணியுடனான ஒப்பந்தம் முடிவுக்கு வரவுள்ளது. இந்த ஒப்பந்தத்தை நீட்டித்தால் நிச்சயம் மகிழ்ச்சியடைவேன். ஏனென்றால் சொந்த கிளப் அணிக்காக ஆடுவது எப்போதும் மகிழ்ச்சி'' என்றார்.

பிரபிர் தாஸ்

இதனைத் தொடர்ந்து பிரபிர் பேசுகையில், ''காயம் காரணமாக கடந்தத் தொடரில் என்னால் பங்கேற்க முடியவில்லை. அதனால் இந்தத் தொடரில் அனைத்துப் போட்டிகளிலும் ஆட வேண்டும் என முன்பிருந்தே என்னுள் இலக்கு வைத்துக்கொண்டேன். அதனால் தானோ என்னவோ, இந்தத் தொடர் எனக்கு மறக்க முடியாத அளவிற்கு பல விலைமதிப்பற்ற ஞாபகங்களைக் கொடுத்துள்ளது'' என்றார்.

இதுமட்டுமல்ல நடந்து முடிந்த ஐஎஸ்எல் இறுதிப்போட்டியில் ஏடிகே அணியின் மிக முக்கிய டிஃபெண்டர் சுமித் ரதியின் வயது 18 மட்டுமே. அந்தப் போட்டியில் ஆடியவர்களில் மிகவும் இளையவரும் இவரே. இவரின் ஆட்டத்தைப் பார்த்து ரசிகர்கள் மட்டும் மிரளவில்லை. இந்தியாவே மிரண்டது. அதனால்தான் இந்தாண்டுக்கான எமர்ஜிங் வீரர் என்ற விருது சுமித் ரதியை தேடி வந்துள்ளது.

சுமித் ரதி

இந்தியாவில் கால்பந்து விளையாட்டு வளர்ந்துவருவதற்கான குறியீடுகள் ஆங்காங்கே தெரிவதன் மூலம், சர்வதேச தரத்திலான வீரர்கள் விரைவில் வெளிவருவார்கள் என எதிர்பார்க்கலாம்.

இதையும் படிங்க:ரியல் மாட்ரிட்டை வீழ்த்திய மான்செஸ்டர் சிட்டி

ABOUT THE AUTHOR

...view details