தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய கால்பந்து அணி!

கரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் இந்திய ஆடவர் கால்பந்து அணி ஓமன், ஐக்கிய அரபு அமீரக அணிகளுக்கு எதிராக நட்பு ரீதியிலான சர்வதேச கால்பந்து போட்டியில் விளையாட திட்டமிட்டுள்ளது.

Indian football team to play friendlies against Oman and UAE in March
Indian football team to play friendlies against Oman and UAE in March

By

Published : Feb 23, 2021, 10:35 PM IST

கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதையடுத்து, விளையாட்டு வீரர்கள் பயிற்சி பெறுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து, வைரஸின் தாக்கம் குறையத் தொடங்கியதைத் தொடர்ந்து ஐஎஸ்எல் கால்பந்து தொடரை பார்வையாளர்களின்றி அகில இந்திய கால்பந்து சம்மேளனம் நடத்தி வருகிறது.

இந்நிலையில், ஐஎஸ்எல் தொடர் முடிவடைந்ததும் இந்திய ஆடவர் கால்பந்து அணி வெளிநாடு சுற்றுப்பயணங்களில் பங்கேற்று விளையாட அகில இந்திய கால்பந்து சம்மேளனம் திட்டமிட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக வருகிற மார்ச் 25ஆம் தேதி ஓமன் அணியுடனும், மார்ச் 29ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரக அணியுடனும் இந்திய கால்பந்து அணி நட்பு ரீதியிலான சர்வதேச போட்டிகளில் விளையாடவுள்ளதாக அகில இந்திய கால்பந்து சம்மேளனம் இன்று அறிவித்துள்ளது.

இதற்கான ஆடவர் இந்திய கால்பந்து அணி மார்ச் 15ஆம் தேதி துபாய்க்கு செல்லவுள்ளதாகவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: ஐபிஎல் 2021: டெல்லி கேப்பிட்டல்ஸை வழிநடத்தும் ஸ்மித்?

ABOUT THE AUTHOR

...view details