தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

#SAFFU18: கடைசி நிமிடத்தில் கோல்... சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா! - #BANIND

18 வயதுக்குட்பட்டோருக்கான தெற்காசிய சாம்பியன்ஷிப் கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி வங்கதேசத்தை வீழ்த்தி கோப்பையை வென்றது.

SAAF18

By

Published : Sep 29, 2019, 6:54 PM IST

தெற்காசிய கால்பந்து சம்மேளனம் சார்பில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை 18 வயதுக்குட்பட்டோருக்கான கால்பந்து தொடர் நடத்தப்பட்டுவருகிறது. அந்தவகையில், மூன்றாவது தெற்காசிய சாம்பியன்ஷிப் தொடர் நேபாள் தலைநகர் காத்மண்டுவில் நடைபெற்றது. இதில், இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்திய அணி, வங்கதேச அணியுடன் பலப்பரீட்சை நடத்தியது.

ஆட்டம் தொடங்கியதிலிருந்தே இந்திய அணி அதிரடியாக விளையாடியது. இரண்டாவது நிமிடத்திலேயே இந்திய வீரர் விக்ரம் பர்தாப் சிங் கோலடித்து அசத்தினார். இதைத்தொடர்ந்து, வங்கதேச வீரர் யாசின் அரஃபாத் 40ஆவது நிமிடத்தில் கோல் அடித்ததால், முதல் பாதி ஆட்டம் 1-1 என்ற கணக்கில் முடிவு பெற்றது.

இரண்டாம் பாதியில் இரு அணி வீரர்களும் கோலடிக்க கடுமையாக போராடினர். ஆட்டத்தின் இறுதி நிமிடத்தில் இந்திய வீரர் ரவி பஹதுர் ரானா மிரட்டலான கோல் அடித்தார். இதனால் இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் இப்போட்டியில் த்ரில் வெற்றிபெற்று முதல்முறையாக கோப்பையை வென்றது.

சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணி

அதேசமயம், இந்தப் போட்டியின்மூலம் வங்கதசே அணி தொடர்ந்து இரண்டாவது முறையாக இந்தத் தொடரின் இறுதிப் போட்டியில் தோல்வியை சந்தித்துள்ளது. முன்னதாக, 2017இல் அந்த அணி நேபாளம் அணியுடன் 2-0 என்ற கணக்கில் வீழ்ந்தது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details