தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

தரவரிசையில் முன்னேறிய இந்திய மகளிர் கால்பந்து அணி! - தரவரிசையில் முன்னேறிய இந்திய

சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு இன்று வெளியிட்ட சர்வதேச மகளிர் கால்பந்து அணிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய மகளிர் கால்பந்து அணி 53ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

India rise to 53rd on FIFA women's football rankings
India rise to 53rd on FIFA women's football rankings

By

Published : Dec 19, 2020, 10:20 AM IST

சர்வதேச கால்பந்து கூட்டமைப்பான ஃபிஃபா, இன்று சர்வதேச மகளிர் கால்பந்து அணிகளுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டது.

இப்பட்டியலில் 2,192 புள்ளிகளைப் பெற்று அமெரிக்கா முதலிடத்திலும், 2,091 புள்ளிகளுடன் ஜெர்மனி இரண்டாம் இடத்தையும், 2,032 புள்ளிகளைப் பெற்று பிரான்ஸ் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளன.

இந்தியா முன்னேற்றம்

இப்பட்டியலில் இந்திய மகளிர் அணி 56ஆவது இடத்திலிருந்து மூன்று இடங்கள் முன்னேறி 53ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. இதன்மூலம் சர்வதேச கால்பந்து தரவரிசைப் பட்டியலில் இந்திய மகளிர் அணி 53ஆவது இடத்திற்கு முன்னேறுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

அபார முன்னேற்றமடைந்த மால்டா

இப்பட்டியலில் அதிக இடங்கள் முன்னேறிய அணியாக மால்டா உருவாகியுள்ளது. அந்த அணி 37 இடங்கள் முன்னேறி, 16ஆவது இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளது.

இதையும் படிங்க: முதல் டி20: பாகிஸ்தானை வீழ்த்தியது நியூசிலாந்து!

ABOUT THE AUTHOR

...view details