கால்பந்து அணிகளுக்கான தரவரிசைப் பட்டியலை சர்வதேச கால்பந்து கூட்டமைப்பான ஃபிபா வெளியிட்டுள்ளது. இதில், 103ஆவது இடத்தில் இருந்த இந்திய அணி தற்போது இரண்டு இடங்கள் முன்னேறி 101ஆவது இடத்தை பிடித்துள்ளது.
கால்பந்து: 101ஆவது இடத்தில் இந்தியா - மெஸ்ஸி
டெல்லி: ஃபிபா வெளியிட்டுள்ள சர்வதேச கால்பந்து அணிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய அணி 101ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
ஆசிய நாடுகள் மத்தியில் இந்தியா 18ஆவது இடத்தில் உள்ளது. ஆசிய கோப்பையை வென்ற கத்தார் அணி 55ஆவது இடத்திலும், ஐக்கிய அரபு அமீரகம் 67ஆவது இடத்திலும் உள்ளது. இந்த பட்டியலில் பெல்ஜியம் அணி தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. உலக சாம்பியன் பிரான்ஸ் அணி இரண்டாவது இடத்திலும், பிரேசில் அணி மூன்றாவது இடத்திலும் உள்ளது.
உலகக் கோப்பை கால்பந்து தொடரில் இரண்டாவது இடத்தை பிடித்த குரோஷியா ஐந்தாவது இடத்தில் உள்ளது. ரொனால்டோ தலைமையிலான போர்ச்சுகல் அணி 7ஆவது இடத்திலும், மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி 11ஆவது இடத்திலும் தொடர்ந்து நீடிக்கிறது.