தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

யு-19 ஆசிய கால்பந்து சாம்பியன்ஷிப் - ஆப்கானிஸ்தானிடம் வீழ்ந்த இந்தியா - afc u19 championship

ரியாத்: யு-19 ஆசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி தொடர்ச்சியாக மூன்றாவது தோல்வியைச் சந்தித்துள்ளது.

foot ball

By

Published : Nov 11, 2019, 12:53 PM IST

ஆசிய கால்பந்து கூட்டமைப்பு (ஏஎஃப்சி) சார்பில் நடத்தப்படும் 19 வயதுக்குட்பட்டோருக்கான ஏஎஃப்சி யு-19 கால்பந்து போட்டிகள் நடைபெற்றுவருகிறது. ஆசிய கண்டத்தைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்ட அணிகள் இந்தத் தொடரில் பங்கேற்றுள்ளன. பல்வேறு பிரிவுகளாக அணிகள் பிரிக்கப்பட்டுள்ள நிலையில் எஃப் பிரிவில் சவுதி அரேபியா, உஸ்பெகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இந்தியா உள்ளிட்ட அணிகள் இடம்பெற்றுள்ளன.

இதில் எஃப் பிரிவில் நேற்று நடைபெற்ற போட்டியில் இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இப்போட்டியில் இரண்டாவது மற்றும் நான்காவது நிமிடத்திலேயே ஆப்கானிஸ்தான் அணி கோல் அடித்து மிரட்டியது.

அதன்பின் இந்திய வீரர்கள் ஆப்கானிஸ்தானின் தடுப்பாட்டத்தைத் தாண்டி கோல் அடிக்க முயன்றனர். அப்போது 22ஆவது நிமிடத்தில் இந்திய வீரர் விக்ரம் பர்தாப் சந்து அடித்த கோலை ஆப்கான் கோல் கீப்பர் தடுத்து நிறுத்தினார்.

பின்னர் மீண்டும் 29ஆவது நிமிடத்தில் ஆப்கான் வீரர் காத்தம் டெல் கோல் அடித்ததால் அந்த அணி முதல் பாதியில் 3-0 என வலுவான முன்னிலைப் பெற்றது. அதன்பின் இரண்டாவது பாதி ஆட்டத்திலும் இந்திய வீரர்களின் முயற்சிகளை தவிடுபொடியாக்கிய ஆப்கானிஸ்தான் வீரர்கள் சிறந்த தடுப்பாட்டத்தை வெளிப்படுத்தினர்.

இதனால் இந்திய அணி 0-3 என்ற கோல் கணக்கில் ஆப்கானிஸ்தான் அணியிடம் வீழ்ந்தது. இந்தத் தொடரில் விளையாடிய மூன்று போட்டிகளிலும் தோல்வியுற்ற இந்திய அணி புள்ளிப்பட்டியலில் கடைசி இடம் பிடித்து தொடரிலிருந்து வெளியேறியது.

ABOUT THE AUTHOR

...view details