தெற்காசிய கால்பந்து சம்மேளனம் சார்பில் மகளிருக்கான தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடர் பூடானில் நடைபெற்றது. இதில், நடப்பு சாம்பியனான இந்திய மகளிர் அணி இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில், வங்கதேச அணியை எதிர்கொண்டது. முன்னதாக, இவ்விரு அணிகள் மோதிய லீக் போட்டி 1-1 என்ற கணக்கில் டிராவில் முடிந்தது.
#SAFFU15Women: வங்கதேசத்தை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தக்கவைத்த இந்தியா! - தெற்காசிய கால்பந்து தொடர்
15 வயதுக்கு உட்பட்டோருக்கான மகளிர் தெற்காசிய சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி வங்கதேசத்தை வீழ்த்தி கோப்பையை தக்கவைத்துக்கொண்டது.
SAFF U15 Womens Cup
இதைத்தொடர்ந்து, இன்றைய ஆட்டத்தில் இரு அணிகளுக்கும் கூடுதலான நேரம் வழங்கப்பட்டபோதிலும், கோலடிக்கவில்லை. இதனால், ஆட்டத்தின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் முறையாக இரு அணிகளுக்கும் பெனால்டி வழங்கப்பட்டது. பரபரப்பாக நடைபெற்ற இந்த பெனால்டி ஷூட் அவுட்டில் இந்திய மகளிர் அணி 5-3 என்ற கணக்கில் வங்கதேச அணியை வீழ்த்தி சாம்பியன்ஷிப் பட்டத்தை தக்கவைத்துக்கொண்டது.