இத்தாலியின் பிரபல கால்பந்து தொடரான சீரி ஏ தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இதில் இன்று (பிப்.01) நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ரோமா அணி வெரோனா அணியை எதிர்கொண்டது.
இப்போட்டியின் ஆரம்பம் முதலே அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோமா அணிக்கு ஆட்டத்தின் 20ஆவது நிமிடத்தில் ஜியான்லுகா மான்சினியும், 22ஆவது நிமிடத்தில் ஹென்றிக் மிகிதாரியனும், 29ஆவது நிமிடத்தில் போர்ஜா மேயரும் அடுத்தடுத்து கோல்களை அடித்து அணியின் வெற்றியை முதல் பாதி ஆட்டத்திலேயே உறுதி செய்தனர்.