இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரராக வலம்வருபவர் ரோஹித் சர்மா. ஸ்பெயினின் பிரபல கால்பந்து தொடரான லாலிகாவுக்கு இந்தியாவின் விளம்பரத் தூதராகவும் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் ரோஹித் ஃபேஸ்புக் நேரலை மூலம் லாலிகாவின் அதிகாரப்பூர்வ நெறியாளர் ஜோ மோரிசனுடன் நேர்காணலில் பங்கேற்றார்.
அப்போது பேசிய ரோஹித், ‘நான் கால்பந்து விளையாட்டுக்கு மிகப்பெரும் ரசிகன். கிரிக்கெட்டைவிட எனக்கு மிகவும் பிடித்த விளையாட்டு என்றால் அது கால்பந்து மட்டும்தான். நான் ஒவ்வொரு முறை வீட்டிலிருக்கும்போதும் கிரிக்கெட் பார்ப்பதைவிட, கால்பந்து விளையாட்டைப் பார்ப்பதைத்தான் வாடிக்கையாக கொண்டுள்ளேன். ஏனெனில் இது மிகவும் திறமையான விளையாட்டு, அதனால்தான் நான் கால்பந்து விளையாட்டைக் காண்பதை விரும்புகிறேன் என்று தெரிவித்தார்.