தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

அமெரிக்காவின் மேஜர் லீக் கால்பந்து தொடரில் ஆடவேண்டும்: பார்சி. வீரர் க்ரீஸ்மேன்! - பார்சிலோனா

அமெரிக்காவின் மேஜர் லீக் கால்பந்து தொடரில் ஆடவேண்டும் என பார்சிலோனா அணியின் முன்னணி வீரர் ஆண்டொய்ன் க்ரீஸ்மேன் விருப்பம் தெரிவித்துள்ளார்.

i-really-want-to-play-there-antoine-griezmann-eyes-future-mls-move
i-really-want-to-play-there-antoine-griezmann-eyes-future-mls-move

By

Published : Jun 5, 2020, 8:04 PM IST

கரோனா வைரசால் ஒத்தி வைக்கப்பட்ட கால்பந்து போட்டிகள் மீண்டும் தொடங்குவதற்கான பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் பார்சிலோனா அணியின் ஆண்டோய்ன் க்ரீஸ்மேன் தனது எதிர்கால திட்டங்கள் பற்றி பேசியுள்ளார்.

அதில், ''பார்சிலோனா அணிக்காக லாலிகா, சாம்பியன்ஸ் லீக் பட்டங்களைக் கைப்பற்ற வேண்டும் என்பது தான் எனது திட்டம். எனது கனவும் அது தான். அந்த வெற்றிக்கு பின், ஒரு உலகக்கோப்பை வெல்ல வேண்டும். எல்லாவற்றையும் முடித்துவிட்டு அமெரிக்காவின் மேஜர் லீக் கால்பந்து தொடரில் பங்கேற்க வேண்டும்.

எந்த அணிக்காக ஆடவேண்டும் என்ற திட்டம் எதுவும் இல்லை. ஆனால் அந்த தொடரில் ஆடவேண்டும். எனது கால்பந்து வாழ்வின் இறுதியில் அமெரிக்காவில் விளையாட வேண்டும் என்பது தான் இலக்கு'' என்றார்.

முன்னதாக ஐரோப்பா லீக் போட்டிகளில் மிகவும் சிறப்பாக ஆடிய டேவிட் பெக்காம், டேவிட் ஹென்றி ஆகியோர் தனது கால்பந்து வாழ்வின் இறுதி நாள்களில் அமெரிக்க அணிக்களுக்காக ஆடினர் என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details