நடப்பு சீசனுக்கான ஐ லீக் கால்பந்து தொடர் நவம்பர் 30ஆம் தேதி தொடங்கியது. இதில், நேற்று கோவையில் நடைபெற்ற நான்காவது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சிட்டி எஃப்சி, டிராவ் எஃப்சி அணியுடன் பலப்பரீட்சை நடத்தியது. ஆட்டத்தின் முதல் பாதியிலே டிராவ் எஃப்சி அணிக்கு வழங்கப்பட்ட ஃப்ரீகிக்கை சென்னை அணியின் டிஃபெண்டர் ரொபர்டோ எஸ்லாவா தடுத்து நிறுத்தினார். இதையடுத்து, சென்னை அணி பந்தை அதிகம் பாஸ் செய்து விளையாடியது.
குறிப்பாக, இந்த சீசனில் சென்னை அணிக்காக ஒப்பந்தமான கட்சுமி யுசா (Katsumi Yusa) லெஃப்ட் பேக்கில் தனது சிறப்பான திறனை வெளிப்படுத்தினார். அதன்பின், 49ஆவது நிமிடத்தில் சென்னை அணியின் மற்றொரு புதுமுக வீரர் அடோல்ஃபோ மிரன்டா tap in முறையில் கோல் அடித்தார்.இதையடுத்து, சென்னை அணிக்கு கோல் அடிக்க பல வாய்ப்புகள் கிடைத்தும் ஃபினிஷிங் சரியில்லாததால் அவர்களால் கோல் அடிக்க முடியாமல் போனது.