ஐ லீக் கால்பந்து தொடரின் நேற்றைய ஆட்டத்தில் டிபெண்டிங் சாம்பியனான சென்னை சிட்டி எஃப்.சி அணியை எதிர்த்து சர்ச்சில் பிரதர்ஸ் அணி ஆடியது. ஆட்டத்தின் தொடக்கம் முதலே இரு அணிகளும் கவனமாக ஆடின. முதல் பாதி ஆட்டத்தின் முடிவில் இரு அணிகளும் கோல்கள் எதுவும் அடிக்காததால் 0-0 என நிலையில் முடிவடைந்தது.
பின்னர் நடந்த இரண்டாம் பாதி ஆட்டத்தில் கோல்கள் எதுவும் அடிக்கப்படவில்லை. 84ஆவது நிமிடம் வரை கோல்கள் விழாததால் ஆட்டம் டிராவாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 85ஆவது நிமிடத்தில் சென்னை அணியின் யுசா ஆட்டத்தின் முதல் கோலை அடித்து சென்னை அணிக்கு முன்னிலை ஏற்படுத்தினார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அடுத்த இரண்டு நிமிடங்களிலேயே சர்ச்சில் பிரதர்ஸ் அணியின் லல்கா கோல் அடிக்க 1-1 என்ற நிலை வந்தது. இதனால் இரண்டாம் பாதியின் முடிவில் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. பின்னர் கூடுதலாக 7 நிமிடங்கள் வழங்கப்பட்டது.