இந்தியக் கால்பந்து அணியின் கேப்டனான சுனில் சேத்ரி (35) இந்திய கால்பந்து சம்மேளனத்தின் முகநூல் பக்கத்தில், அளித்த பேட்டியில்,
"நான் என் கனவை வாழ்ந்து கொண்டிருக்கேன்!, நான் கால்பந்து விளையாட தொடங்கி பதினைந்து வருடங்கள் முடிவடைகிறது. 2005இல் என் முதல் போட்டியை பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடியது நினைவுக்கு வருகிறது.
சமூக வலைத்தளங்களில், நான் எப்போது ஓய்வு பெறுவேன் என்று பரவலாக கேள்விகள் வலம் வந்த வண்ணம் உள்ளன. இதனைப் பார்த்துவிட்டு என் மனைவி சோனம் என்னிடம் கேட்டபோது, ஓய்வு பெறுவது குறித்து இன்னும் நான் யோசிக்கவில்லை, முன்பைவிட இப்போது அதிக உடல் கட்டுக்கோப்புடன் உணருகிறேன் என்றேன்.