கோவாவில் நடைபெற்றுவரும் ஐஎஸ்எல் கால்பந்துத் தொடரின் ஏழாவது சீசன் விறுவிறுப்புக்குப் பஞ்சமின்றி நடந்துவருகிறது. இதில் இன்று (நவ. 28) நடைபெறும் ஒன்பதாவது லீக் ஆட்டத்தில் பெங்களூரு எஃப்சி அணி - ஹைதராபாத் எஃப்சி அணியை எதிர்கொண்டது.
பரபரப்புடன் தொடங்கிய இந்த ஆட்டத்தில் இரு அணி வீரர்களும் கடுமையான டிஃபென்ஸ் ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் முதல் பாதி ஆட்டநேர முடிவில் இரு அணிகளும் கோலேதுமின்றி சமநிலையில் இருந்தன.
தொடர்ந்து நடைபெற்ற இரண்டாம் பாதி ஆட்டத்திலும், இரு அணி வீரர்களும் மற்ற அணியின் டிஃபென்ஸைத் தாண்டி கோலடிக்க முடியவில்லை. இதன்மூலம் ஆட்டநேர முடிவில் இரு அணிகளும் கோலேதும் அடிக்காததால் ஆட்டம் டிராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது.
இதன்மூலம் ஐஎஸ்எல் புள்ளிப்பட்டியலில் நான்கு புள்ளிகளுடன் ஹைதராபாத் எஃப்சி அணி நான்காம் இடத்திலும், 2 புள்ளிகளுடன் பெங்களூரு அணி ஆறாவது இடத்திலும் நீடிக்கின்றன.
இதையும் படிங்க:எஃப்சி கோவா அணி வீரருக்கு ஷோ கேஸ் நோட்டீஸ்!