ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் 7ஆவது சீசன் கரோனா பாதுகாப்பு விதிமுறைகளுடன் கோவாவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடந்த லீக் ஆட்டத்தில் சென்னையின் எஃப்சி அணி - ஹைதராபாத் எஃப்சி அணியை எதிர்கொண்டது.
பரபரப்புடன் நடைபெற்ற இப்போட்டியின் முதல் பாதி ஆட்டத்தில் இரு அணி வீரர்களும் கடுமையான டிஃபென்ஸை வெளிப்படுத்தினர். இதனால் முதல் பாதி ஆட்டநேர முடிவில் இரு அணிகளும் கோல் ஏதுமின்றி சமநிலையில் இருந்தன.
இதைத்தொடர்ந்து நடைபெற்ற இரண்டாம் பாதியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹைதராபாத் அணிக்கு ஜோயல் ஆட்டத்தின் 50 ஆவது நிமிடத்திலும், நர்ஸரி அட்டத்தின் 53, 79ஆவது நிமிடங்களில் அடுத்தடுத்து இரண்டு கோல்களை அடித்தும் அணியை முன்னிலைப்படுத்தினர்.