இந்திய கால்பந்து வரலாற்றில் மிகவும் கவுரவமான கோப்பையாக ரசிகர்களால் கருதப்படும் ஐ லீக் கால்பந்துத் தொடர் 2007ஆம் ஆண்டு முதல் நடந்துவருகிறது. அதில் இதுவரை டெம்போ அணி மூன்று முறையும், சர்ச்சில் பிரதர்ஸ், பெங்களூரு அணி தலா இரண்டு முறையும், மோகன் பகன் அணி ஒரு முறையும் கோப்பையைக் கைப்பற்றியுள்ளன. கடந்த ஆண்டு சென்னை சிட்டி எஃப்.சி. அணி ஐ லீக் கோப்பையைக் கைப்பற்றியது.
இதில் மோகன் பகன் அணி ஒரு முறை மட்டுமே கோப்பையைக் கைப்பற்றியிருந்தாலும், மூன்று முறை இரண்டாவது இடத்தை நிறைவு செய்துள்ளது. அந்த அணிக்கு இந்த ஆண்டு இரண்டாவது முறையாக கோப்பையைக் கைப்பற்ற வாய்ப்புகள் உருவாகியுள்ளன.
இந்த ஆண்டுக்கான ஐ லீக் கால்பந்துத் தொடரில் மோகன் பகன் அணி ஆடிய 14 போட்டிகளில் 11 வெற்றி, 2 டிரா, 1 தோல்வியுடன் 35 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. மூன்று முறை கைகளுக்கு அருகிலிருந்த கோப்பையை தவறவிட்ட மோகன் பகன் அணி, இம்முறை அசாத்திய சாகசங்களுடன் கோப்பையை நெருங்கி வருகிறது.