ஃபிரான்ஸ் தலைநகர் பாரிஸில் மகளிர் உலகக்கோப்பை கால்பந்து நாளை அதிகாலை 12.30 மணியளவில் தொடங்கவுள்ளது. அதனை அங்கீகரிக்கவே கூகுள் நிறுவனம் சிறப்பான டூடுலை வெளியிட்டுள்ளது.
மகளிர் உலகக்கோப்பை கால்பந்திற்கான டூடுலை வெளியிட்ட கூகுள்! - டூடூல்
கூகுள் நிறுவனம் முக்கிய நிகழ்வுகள், தலைவர்கள் பிறந்தநாள் உள்ளிட்டவைகளை அங்கீகரிக்க சிறப்பான டூடுலை வெளியிடும். அதன் தொடர்ச்சியாக மகளிர் உலகக்கோப்பை கால்பந்திற்கான டூடுல் வெளியிட்டுள்ளது.
Google doodle
உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் 24 நாடுகள் பங்கேற்கின்றன. முதல் முறையாக உலகக்கோப்பை கால்பந்திற்கு சிலி, ஸ்காட்லாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் ஜமைக்கா ஆகிய அணிகள் பங்கேற்கவுள்ளன. முதல் போட்டியில் ஃபிரான்ஸ்- தென் கொரியா அணிகள் நாளை களமிறங்குகின்றன.
நடப்பு சாம்பியன் அமெரிக்கா 12ஆம் தேதி தனது முதல் போட்டியில் விளையாடுகின்றது. உலகக்போப்பையின் இறுதி போட்டி ஜூலை 7ஆம் தேதி நடைபெறுகிறது. வெற்றி பெறும் அணிக்கு 4 மில்லியன் டாலர் பரிசாக வழங்கப்படவுள்ளது.