ஜெர்மன் கோப்பை கால்பந்துத் தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதனிடையே இந்தத் தொடரில் நேற்று நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் சார்ப்ரக்கன், ஃபார்ட்சுனா டஸ்ஸெல்டார்ஃப் அணிகள் மோதின. மிகவும் பரபரப்பாக நடந்த இப்போட்டியில் இரு அணிகளும் 1-1 என சமநிலை வகித்ததால், வெற்றியாளரை தீர்மானிக்க பெனால்டி ஷுட்அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது.
ஐந்து பெனால்டி ஷாட்டுகளை தடுத்த ஜெர்மன் கோல் கீப்பர் - ஐந்து பெனால்டி ஷாட்டுகளை தடுத்த ஜெர்மன் கோல் கீப்பர்
ஜெர்மன் கோப்பை கால்பந்து தொடரில் நேற்றைய ஆட்டத்தில் சார்ப்ரக்கன் அணியின் கோல் கீப்பர் டேனியல் பாட்ஸ், ஐந்து பெனால்டி ஷாட்களை தடுத்து புதிய சாதனைப் படைத்தார்.
இதில் சிறப்பாக செயல்பட்ட சார்ப்ரக்கன் கோல் கீப்பர் டேனியல் பேட்ஸ், அடிக்கப்பட்ட பத்து ஷாட்களில் நான்கை லாவகமாக தடுத்து நிறுத்தினார். இதனால் பெனால்டி ஷூட்அவுட்டில் 7-6 என்ற கணக்கில் ஃபார்ட்சுனா டஸ்ஸெல்டார்ஃப் அணியை வீழ்த்தி, அரையிறுதிக்குள் நுழைந்தது. நான்காவது டிவிஷன் அணி ஒன்று முதன்முறையாக அரையிறுதிக்குள் நுழைவது இதுவே முதன்முறையாகும்.
முன்னதாக இப்போட்டியின் இரண்டாவது பாதியிலும் ஒரு பெனால்டி ஷாட்டை தடுத்து நிறுத்திய டேனியல், இப்போட்டியில் ஒட்டுமொத்தமாக ஐந்து பெனால்டி ஷாட்களை தடுத்து அணியின் வெற்றிக்கு உதவினார் என்பது குறிப்பிடத்தக்கது.