கரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில் இந்தாண்டுக்கான இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடர் எப்போது நடைபெறுமென்ற கேள்வி ரசிகர்கள் மனதில் எழத்தொடங்கியுள்ளது. மேலும், கரோனா வைரஸ் காரணமாக இந்த சீசனுக்கான போட்டிகள் அனைத்தும் ஒரே நகரில் நடத்தவும் ஐஎஸ்எல் ஆலோசனை மேற்கொண்டு வந்தது.
ஐஎஸ்எல் தொடர் குறித்தான ஆலோசனைக் கூட்டம் காணொலி கூட்டரங்கு மூலம் இன்று (ஆகஸ்ட் 16) நடைபெற்றது. இந்த கூட்டத்தின் முடிவில் 2020-21ஆம் ஆண்டிற்கான ஐ.எஸ்.எல் தொடரை வருகிற நவம்பர் மாதத்தில் தொடங்கலாம் என்றும், தொடரின் அனைத்து போட்டிகளும் கோவாவில் நடைபெறும் என்றும் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது குறித்து கால்பந்து விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் நிர்வாகத் தலைவர் நீடா அம்பானி கூறுகையில், “ஐ.எஸ்.எல் தொடரின் ஏழாவது சீசனை இந்தாண்டு நவம்பர் மாதம் முதல் கோவாவில் நடத்த ஐ.எஸ்.எல் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. மேலும், கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இந்த சீசனின் அனைத்து போட்டிகளும் ஜவஹர்லால் நேரு மைதானம் (ஃபடோர்டா), ஜிஎம்சி தடகள மைதானம் (பாம்போலிம்), திலக் மைதன் மைதானம் (வாஸ்கோ) ஆகிய மூன்று இடங்களில் பார்வையாளர்களின்றி நடைபெறும்.