இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் ஆறாவது சீசனுக்கான நேற்றைய லீக் ஆட்டத்தில் கோவா எஃப்.சி. அணி கேரள பிளாஸ்டர்ஸ் அணியை எதிர்கொண்டது. ஆட்டத்தின் ஆரம்பம் முதலே தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய கோவா அணியின் ஹியூகோ பவுமஸ் 26ஆவது நிமிடத்தில் கோலடித்து அணியின் கோல் கணக்கை தொடங்கிவைத்தார்.
அதைத் தொடர்ந்து அந்த அணியின் ஜாக்கிசந்த் சிங் ஆட்டத்தின் 46ஆவது நிமிடத்தில் கோலடித்து அசத்த கோவா அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றது.
இதைத் தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த தொடங்கிய கேரளா பிளாஸ்டர்ஸ் அணியின் ரஃபேல் மெஸ்ஸி ஆட்டத்தின் 53ஆவது நிமிடத்தில் கோலடித்து கேரள அணியின் கோல் கணக்கைத் தொடங்கினார். பின் ஆட்டத்தின் 69ஆவது நிமிடத்தில் அந்த அணியின் பார்தலோமெவ் ஒக்பேச் கோலடித்து ஆட்டத்தை சமனிலைப்படுத்தினார்.