ஸ்பெயின் நாட்டில் நடைபெற்று வரும் பிரபல கால்பந்து தொடரான லாலிகா தொடரின் நடப்பு சீசன், ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இதில் இன்று (அக்.18) நடைபெற்ற லீக் போட்டியில் பார்சிலோனா எஃப்சி அணி, கெட்டாஃப் எஃப்சி அணியுடன் மோதியது.
பரபரப்பான இந்த ஆட்டத்தின் தொடக்கம் முதலே இரு அணி வீரர்களும் கோலடிக்க முயற்சி செய்தனர். ஆனாலும் முதல் பாதி ஆட்டம் நேர முடிவு வரை இரு அணியாலும் கோலடிக்க இயலவில்லை. இதனால் கோலேதுமின்றி முதல் பாதி ஆட்டம் முடிவுக்கு வந்தது.
இதைத்தொடர்ந்து நடைபெற்ற இரண்டாம் பாதி ஆட்டத்திலும் இரு அணியும் சமபலத்துடன் மோதியதால், யார் வெற்றி பெறுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்தது. பின்னர் ஆட்டத்தின் 56ஆவது நிமிடத்திக் கெட்டாஃப் அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது.