தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

லிவர்பூல் அணியின் முன்னாள் பயிற்சியாளர் காலமானார்! - எஃப்.ஏ.கோப்பை

பிரான்ஸ் அணியின் முன்னாள் வீரரும், லிவர்பூல் அணியின் முன்னாள் பயிற்சியாளருமான ஜேரார்ட் ஹூலியர்(73) இதய அறுவை சிகிச்சையின் போது மரணமடைந்தார்.

Gerard Houllier, former Liverpool coach, dies at 73
Gerard Houllier, former Liverpool coach, dies at 73

By

Published : Dec 14, 2020, 6:55 PM IST

பிரான்ஸ் கால்பந்து அணியின் முன்னாள் நட்சத்திர வீரராக இருந்தவர் ஜேரர்ட் ஹூலியர்(Gerard Houllier). இவர் இங்கிலாந்தின் புகழ்பெற்ற கால்பந்து கிளப்பான லிவர்பூல் அணியின் தலைமை பயிற்சியாளராகவும் செயல்பட்டு வந்தார். இவரது பயிற்சி காலத்தின் போது லிவர்பூல் அணி தொடர்ச்சியாக எஃப்.ஏ.கோப்பை, சாம்பியன்ஸ் லீக் கோப்பை, யு.இ.எஃப்.ஏ கோப்பை ஆகியவற்றை கைப்பற்றி அசத்தியது.

இந்நிலையில், இதய கோளாறு காரணமாக பாரிசில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த, ஜெரார்ட் அறுவை சிகிச்சை செய்யும் போது இறந்து விட்டதாக பிரஞ்சு செய்தி நிறுவனம் வெளியிட்டது.

இதற்கிடையில், இவர் பயிற்சியாளராக பணியாற்றி வந்த லிவர்பூல் கால்பந்து அணியும் இத்தகவலை உறுதி செய்துள்ளது. இதுகுறித்து லிவர்பூல் அணி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “நாங்கள் மூன்று முறை சாம்பியன் பட்டம் வெல்ல காரணமாக இருந்த எங்கள் பயிற்சியாளர் ஜெரார்ட் ஹூலியர் காலமானதற்கு இரங்கல் தெரிவிக்கிறோம்” என்று பதிவிட்டுள்ளது.

மேலும், ஜெரார்ட் ஹூலியரின் இறப்பு செய்தியறிந்த பல்வேறு கால்பந்து வீரர்களும், கால்பந்து கிளப்களும், பல்வேறு துறை சார்ந்த பிரபலங்களும் சமூக வலைதளங்களில் தங்களின் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க:இத்தாலி கால்பந்து ஜாம்பவான் பவுலோ ரோஸி காலமானார்!

ABOUT THE AUTHOR

...view details