இங்கிலாந்து கால்பந்து அணியின் முன்னாள் வீரர் நார்மன் ஹன்டர். இவர் 1966 ஃபிபா உலகக்கோப்பை கால்பந்துத் தொடரை வென்ற இங்கிலாந்து அணிக் குழுவில் இடம்பெற்றிருந்தார். இங்கிலாந்து அணிக்காக 28 போட்டிகளில் விளையாடியுள்ளார். சர்வதேச அளவில் இவர் குறைவான போட்டிகளிலேயே விளையாடியிருந்தாலும் இங்லிஷ் ப்ரீமியர் லீக் தொடரில் ஜாம்பவானாகத் திகழ்ந்தார்.
1962இல் தன் 18ஆம் வயதில் லீட்ஸ் யுனைடெட் அணியில் முதலில் அறிமுகமானார். 14 ஆண்டுகள் அந்த அணிக்காக மட்டும் மொத்தம் 726 போட்டிகளில் விளையாடியுள்ளார். இதன்மூலம், லீட்ஸ் யுனைடெட் அணிக்காக அதிக போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.