அர்ஜெண்டினா தலைநகர் பியூனஸ் அயர்ஸில் உள்ள ஒரு சேரி பகுதியில் அக்.30, 1960ஆம் ஆண்டு, டியாகோ மாரடோனா பிறந்தார். சிறு வயது முதலே கால்பந்து விளையாட்டின் மீது கொண்ட ஆர்வத்தின் காரணமாக கால்பந்து விளையாட்டுப் பயிற்சியில் ஈடுபட்டார்.
அதன் பலனாக, 1976ஆம் ஆண்டு அர்ஜெண்டினா ஜூனியர் அணிக்காக விளையாடி கால்பந்தாட்ட உலகத்திற்கு மாரடோனா அறிமுகமானார். அதன் பின்னர் 1981-82ஆம் ஆண்டில் அர்ஜெண்டினாவின் போகா ஜூனியர்ஸ் அணிக்கு தேர்வு செய்யப்பட்டார்.
1986ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பைக்கால்பந்து தொடரில் அர்ஜெண்டினா அணியை வழிநடத்தினார் மிட் ஃபீல்டர் டியாகோ மாரடோனா. அத்தொடரில் இங்கிலாந்து அணிகெதிராக அரையிறுதிப் போட்டியின் போது தனது கைகளால் கோலடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். அவரின் அந்த கோலானது வரலற்றின் மிகப் பெரிய கோலாகவும் விளங்கி வருகிறது.
அதிலிருந்து அவருக்கு ‘கடவுளின் கை’ என்ற புனைப்பெயரும் வழங்கப்பட்டது. மேலும் அந்த ஆண்டு அர்ஜெண்டினா அணிக்கு கால்பந்து உலகக் கோப்பையையும் பெற்றுத் தந்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.
அதனைத் தொடர்ந்து 1987 மற்றும் 1990 ஆண்டு நடைபெற்ற இத்தாலியின் சிரி ஏ கால்பந்து தொடரில் நபோலி அணியை வழிநடத்தி கோப்பையை வெல்வதற்கு முக்கிய காரணமாகவும் விளங்கினார்.
கடந்த 1987 மற்றும் 1990ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற இத்தாலி கோப்பை, யு.இ.எஃப்.ஏ ஆகிய தொடர்களிலும் நபோலி அணி கோப்பையை வெல்வதற்கு உதவினார்.