தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

சாம்பியன்ஸ் லீக்: ஆறாவது முறையாக கோப்பையைக் கைப்பற்றி பேயர்ன் முனிச் சாதனை!

யு.இ.எஃப்.ஏ. சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் பேயர்ன் முனிச் அணி 1-0 என்ற கோல் கணக்கில் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணியை வீழ்த்தி ஆறாவது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

Flawless Bayern beat PSG to win 'record' sixth Champions League title
Flawless Bayern beat PSG to win 'record' sixth Champions League title

By

Published : Aug 24, 2020, 4:36 PM IST

Updated : Aug 24, 2020, 6:33 PM IST

யு.இ.எஃப்.ஏ. சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் இறுதிப்போட்டி இன்று (ஆக.24) நடைபெற்றது. இந்தப் போட்டியில் பேயர்ன் முனிச் அணி, பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணியை எதிர்த்து விளையாடியது.

விறுவிறுப்பான இந்தப் போட்டியின் தொடக்கம் முதலே இரு அணி வீரர்களும் சம பலத்துடன் மோதினர். இதனால் முதல் பாதி ஆட்டநேர முடிவில் கோலேதுமின்றி ஆட்டத்தில் சமநிலை நீடித்தது.

இதைத்தொடர்ந்து நடைபெற்ற இரண்டாம் பாதி ஆட்டத்தில் முழுத்திறமையையும் வெளிப்படுத்திய பேயர்ன் முனிச் அணியின் கிங்ஸ்லி கோமன் அட்டத்தின் 59ஆவது நிமிடத்தில் கோலடித்து, அணியின் கோல் கணக்கை தொடங்கிவைத்தார்.

பின்னர் இறுதி வரை போராடிய பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணி எதிரணியின் டிஃபென்ஸை கடந்து கோலடிக்க இயலவில்லை. இதனால் ஆட்டநேர முடிவில் பேயர்ன் முனிச் அணி 1-0 என்ற கோல் கணக்கில் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் பேயர்ன் முனிச் அணி யு.இ.எஃப்.ஏ. சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் ஆறாவது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி அசத்தியுள்ளது.

இதையும் படிங்க:தோனி தனித்திறன் படைத்தவர்; அரிதான ஒருவர் - சவுரவ் கங்குலி!

Last Updated : Aug 24, 2020, 6:33 PM IST

ABOUT THE AUTHOR

...view details