தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

களத்தில் மயக்கமடைந்த டென்மார்க் வீரர்; அதிர்ச்சியில் உறைந்த கால்பந்து உலகம் - ரொமேலு லுகாகு

யூரோ 2020 கால்பந்து தொடரின் டென்மார்க் - பின்லாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியில் டென்மார்க் வீரர் கிறிஸ்டியன் எரிக்சன் ஆட்டத்தின் பாதிலேயே மயங்கி விழுந்த சம்பவம், கால்பந்து ரசிகர்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

டென்மார்க் வீரர் கிறிஸ்டியன் எரிக்சன்
டென்மார்க் வீரர் கிறிஸ்டியன் எரிக்சன்

By

Published : Jun 13, 2021, 11:57 AM IST

கோபன்ஹேகன் (டென்மார்க்): ஐரோப்பாவின் முன்னணி அணிகள் பங்கேற்கும் யூரோ 2020 கால்பந்து போட்டித் தொடர் நேற்று முன்தினம் (ஜூன் 11) தொடங்கியது. 2020ஆம் ஆண்டில் நடைபெறவிருந்த இத்தொடர் கோவிட்-19 தொற்று காரணமாக ஒத்திவைக்கபட்ட நிலையில், நேற்று முன்தினம் தொடங்கியுள்ளது.

நேற்றைய ஆட்டங்கள்

இரண்டாம் நாளான நேற்று (ஜூன் 12) மூன்று போட்டிகள் நடைபெற்றன. நேற்றைய முதல் போட்டி, வேல்ஸ் - சுவிட்சர்லாந்து அணிகளுக்கு இடையே இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு நடைபெற்றது.

இரண்டாவதாக, டென்மார்க் - பின்லாந்து மோதிய போட்டி இரவு 9.30 மணிக்கும், மூன்றாம் போட்டியில் பெல்ஜியம் - ரஷ்யா அணிகள் நள்ளிரவு 12.30 மணிக்கும் மோதின.

களத்தில் சரிந்த வீரர்

டென்மார்க், பின்லாந்து அணிகளுக்கு இடையேயான போட்டி விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்க, முதல் பாதியின் கடைசி கட்டத்தில் டென்மார்க் முன்கள வீரர் கிறிஸ்டியன் எரிக்சன், விளையாடிக் கொண்டிருந்தபோத திடீரென மயங்கி விழுந்து, முற்றிலும் சுயநினைவை இழந்தார்.

இதனால், போட்டி நடுவர் உடனே போட்டியை நிறுத்தி, மருத்துவர்களை வரவழைத்து, எரிக்சனுக்கு உடனடி சிகிச்சை அளிக்க வழிசெய்தார்.

பின்லாந்து வெற்றி

அதற்கு பின் ஆட்டம் ரத்து செய்யப்படுவதாக நடுவர்கள் அறிவித்தனர். சிறிது நேரத்திற்கு பின், மருத்துவமனையில் எரிக்ஸசனுக்கு நினைவு திரும்பிவிட்டது என்று தகவல் வந்தது. இதையடுத்து ரசிகர்களின் விருப்பத்தின்பேரில், போட்டி மேற்கொண்டு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. ஆட்டநேர முடிவில், பின்லாந்து 1-0 கோல்கணக்கில் டென்மார்க்கை வீழ்த்தியது.

கோலை அர்பபணம் செய்த சகோ

மாரடைப்பால் பாதிக்கப்பட்ட கிறிஸ்டியன் எரிக்சன், இண்டர் மிலன் கிளப் சார்பிலும் விளையாடியுள்ளார். டென்மார்க் - பின்லாந்து போட்டிக்கு பின், நடைபெற்ற பெல்ஜியம் - ரஷ்யா அணிகளுக்கு இடையேயான போட்டியில் பெல்ஜியம் வீரர் ரொமேலு லுகாகு பத்தாவது நிமிடத்தில் அடித்த கோலை எரிக்சனுக்கு அர்ப்பணிப்பதாக தெரிவித்தார்.

கோலை அடித்துவிட்டு கேமாராவை நோக்கி ஓடிவந்த ரொமாலு, "கிறிஸ், கிறிஸ் ஐ லவ் யூ" என உணர்ச்சிகரமாக கூறினார். ரொமாலுவும், எரிக்சனும் இண்டர் மில்ன் கிளப் அணிக்காக விளையாடியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 'பேயர்ன் முனிச்' அணிக்கு ஆடத் தயாராகும் வங்காளச் சிறுவன்!

ABOUT THE AUTHOR

...view details