கோவிட்-19 பெருந்தொற்றுக் காரணமாக உலகம் முழுவதும் 28 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டும், 1.90 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும் உள்ளனர். இப்பெருந்தொற்றின் அச்சுறுத்தலினால் பல்வேறு வகையான விளையாட்டுப் போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
இதில் மிகப்பெரும் பாதிப்பை சந்தித்து வரும் கால்பந்து விளையாட்டு போட்டிகளை மீட்பதற்காக சர்வதேச கல்பந்து கூட்டமைப்பு, தனது கீழ் செயல்படும் உறுப்பு கூட்டமைப்புகளுக்கு உதவ முன்வந்துள்ளது. அதன்படி முதல்கட்டமாக 150 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வழங்குவதாக அறிவித்துள்ளது.
இத்தொகையில் ஒவ்வொரு உறுப்பு கூட்டமைப்பிற்கும் 5 லட்சம் டாலர்கள் வழங்கப்படவுள்ளதாகவும் ஃபிபா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறுத்து ஃபிபா வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இப்பெருந்தொற்றினால் உலக கால்பந்து விளையாட்டு முற்றிலுமாக செயலிழந்துள்ளது. மேலும் இதனால் பாதிக்கப்பட்டுள்ள கால்பந்து கூட்டமைப்புகளுக்கு உதவுவது ஃபிபாவின் கடமையாகும். மேலும் தற்போது நிலவிவரும் அசாதாரண சூழலை சரி செய்ய எங்களது முதல் நிலை நிவாரணத்தை நாங்கள் வழங்கியுள்ளோம். இதனையடுத்து மீதமுள்ள தொகையை நாங்கள் வருகிற ஜூலை மாத தொடக்கத்தில் வழங்கவும் முடிவுசெய்துள்ளோம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக இந்தாண்டு நடைபெறவிருந்த யூரோ 2020, லாலிகா, பிரீமியர் லீக் உள்ளிட்ட பல்வேறு கால்பந்து தொடர்கள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும் இங்கிலாந்தில் அடுத்த ஆண்டு இங்கிலாந்தின் நடைபெறுவதாக இருந்த மகளிர் யூரோ 2021 கால்பந்து தொடரும் ஓராண்டிற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:‘மாஸ்டர் பிளாஸ்டர் 47’ வாழ்த்து கூறிய பிரபலங்கள்!