கோவிட்-19 வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு வகையான விளையாட்டுப் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுவருகின்றன. அந்தவகையில் கடந்த வாரம் சர்வதேச கால்பந்து கூட்டமைப்பான ஃபிஃபா, இந்தாண்டு நடைபெறவிருந்த யூரோ கால்பந்து தொடர், கோபா அமெரிக்கா கால்பந்து தொடர்களை அடுத்தாண்டுக்கு ஒத்திவைப்பதாக அறிவித்திருந்தது.
இன்று நடைபெற்ற ஃபிஃபா உறுப்பினர்களின் காணொலி கலந்தாய்வில் (video conference), கோபா அமெரிக்கா, யூரோ கால்பந்து தொடர்கள் அடுத்தாண்டு ஜூன் 11ஆம் தேதி முதல் ஜூலை 21ஆம் தேதி வரை நடத்த முடிவுசெய்யப்பட்டுள்ளது. இதனால் அந்தத் தேதிகளில் நடைபெறவிருந்த ஃபிஃபா கிளப் அணிகளுக்கான உலகக்கோப்பைத் தொடரின் முதலாவது சீசனை வேறு தேதிக்கு மாற்றியமைக்கவுள்ளதாகவும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.