தமிழ்நாடு

tamil nadu

By

Published : Mar 5, 2020, 10:01 PM IST

ETV Bharat / sports

கொரோனாவால் உலகக்கோப்பை ஒத்திவைப்பு?

சூரிச்: கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வருவதன் காரணமாக வரவிருக்கும் 2022 உலகக் கோப்பை, 2023 ஆசியக் கோப்பை கால்பந்து தகுதிப் போட்டிகளை ஒத்திவைக்க ஃபிஃபா, ஆசிய கால்பந்து கூட்டமைப்பு இணைந்து சர்வதேச கால்பந்து கூட்டமைப்பிற்கு கோரிக்கை விடுத்துள்ளன.

FIFA proposes postponing 2022 word cup qualifiers over coronavirus
FIFA proposes postponing 2022 word cup qualifiers over coronavirus

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, பல்வேறு நாடுகளில் நடைபெறவிருந்த விளையாட்டுப் போட்டிகளில் தேதி மாற்றம் செய்யப்பட்டும், ரத்து செய்யப்பட்டும் உள்ளது. அந்த வகையில் தற்போது 2022ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக்கோப்பை கால்பந்து தொடருக்கான தகுதிப் போட்டிகளையும், 2023ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஆசியக் கோப்பை கால்பந்து தொடருக்கான தகுதிப்போட்டிகளையும் ஒத்தி வைக்குமாறு, சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச கால்பந்து கூட்டமைபின் கூட்டத்தில் ஃபிஃபா, ஏஃப்சி ஆகியவை கோரிக்கையாக வைத்துள்ளன.

இக்கூட்டத்திற்கு பின்பாக வெளியிட்ட அறிக்கையில், 'ஃபிஃபா, ஏஎஃப்சி இரண்டிற்கும், கால்பந்துப் போட்டிகளில் ஈடுபடும் அனைத்து வீரர்களின் ஆரோக்கியம் மிக உயர்ந்த முன்னுரிமையாக உள்ளது. அதனால், உலகக்கோப்பை, ஆசிய கோப்பைக்கான தகுதிச்சுற்று போட்டிகளை ஒத்திவைப்பதற்கான திட்டங்களை தற்போது கால்பந்து சங்க உறுப்பினர்களுக்கு அனுப்பியுள்ளோம். மேலும், உலக சுகாதார அமைப்பின் (WHO) ஒத்துழைப்புடன் கொரோனா தொடர்பான நிலைமையை ஃபிஃபா தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், அதனால் தற்போது நடைபெறவுள்ள போட்டிகளை மாற்றியமைக்க சர்வதேச கால்பந்து சங்கத்தின் ஒப்புதலுக்கு காத்திருப்பதாகவும்' தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: எதிர்காலத்தில் ரிசர்வ் டே இருந்தால் நல்லது - ஹர்மன்ப்ரீத் கவுர்!

ABOUT THE AUTHOR

...view details