2018-19 ஆண்டுக்கான ஐ லீக் கால்பந்து கோபைத் தொடர் சென்னை அணி முதல் முறையாக கைப்பற்றியது. இந்த தொடரில் சென்னை சிட்டி எஃப்.சி அணி அதிகமாக 43 புள்ளிகள் பெற்றதுடன், பல்வேறு விருதினையும் வென்றது.
ஐ லீக் தொடரை வென்ற சென்னை அணிக்கு பிஃபா வாழ்த்து! - ஐ லீக் கால்பந்து
டெல்லி : ஐ லீக் கால்பந்து தொடரை வென்ற சென்னை அணிக்கு, சர்வதேச கால்பந்து சம்மேளனம் வாழ்த்துகளை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கடிதம் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ள பிஃபா தலைவர் இன்ஃபேண்டினோ, சென்னை சிட்டி எஃப்.சி அணி முதன்முறையாக ஐ லீக் கால்பந்து தொடரை வென்றதற்கு வாழ்த்துக்களை கூறிகொள்கிறேன். சென்னை அணியின் உழைப்பிற்கும், கடினமான பயிற்சிக்கும் கிடைத்த மிகப்பெரிய பரிசு. இந்த வெற்றி ரசிகர்களையும் வீரர்களையும் பெருமைகொள்ளும் அளவிற்கு அமைந்துள்ளது. தொடர்ந்து இதேபோன்று செயல்படுங்கள் என தெரிவித்துள்ளார்.
மேலும் இந்திய கால்பந்து சம்மேளனத்திற்கும் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். 2020-ம் ஆண்டு நடைபெறவுள்ள17 வயதிற்குட்டோருக்கான பெண்கள் கால்பந்து உலகக்கோப்பையை இந்தியாவில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.