கால்பாந்து உலகக்கோப்பை தொடர் இந்தாண்டு இறுதியில் கத்தார் நாட்டில் நடைபெறவுள்ளது. இத்தொடருக்கான ஏற்பாடுகளை கத்தார் கால்பந்து கூட்டமைப்பு, அந்நாட்டு விளையாட்டு அமைச்சகம் முழுவீச்சில் செய்துவருகிறது.
இந்நிலையில் உலகக்கோப்பைத் தொடருக்கான ஏற்பாடுகள் குறித்து ஃபிஃபா தலைவர் கியானி இன்பான்டினோ நேரில் பர்வையிட்டார். மேலும் தொடக்கப்போட்டி நடைபெறவுள்ள அல் பேட் மைதானத்தின் ஏற்பாடுகள் குறித்தும் நேரில் ஆய்வுசெய்தார்.
பின்னர் இது குறித்து பேசிய கியானி, "உலகக்கோப்பைத் தொடருக்காக கத்தார் ஏற்பாடு செய்துள்ள மைதானம் பிரமிப்பை ஏற்படுத்துகிறது. அதிலும் அல் பேட் மைதானத்தில் இத்தொடரின் முதல் போட்டி நடைபெறவுள்ளது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.