ஆண்டுதோறும் சர்வதேச கால்பந்து கூட்டமைப்பால் உலகின் தலைசிறந்த வீரர்களைக் கௌரவிக்கும் ‘ஃபிஃபா கால்பந்து விளையாட்டில் சிறந்த வீரர்களுக்கான விருது’ வழங்கும் விழாவை, கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக செப்டம்பர் மாதத்திற்கு ஒத்திவைப்பதாக ஃபிபா அறிவித்திருந்தது.
இதற்கிடையில் வைரசின் தாக்கும் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் சூழலால், செப்டம்பர் மாதம் இத்தாலியின் மிலான் நகரில் நடைபெறவிருந்த ஃபிஃபா வருடாந்திர விருது வழங்கும் விழா மீண்டும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது காணொலி கூட்டரங்கு வாயிலாக ஃபிஃபா வருடாந்திர விருது வழங்கும் விழாவை நடத்தவுள்ளதாக சர்வதேச கால்பந்து நிர்வாக குழு அறிவித்துள்ளது. அதன்படி வருகிற டிசம்பர் 17ஆம் தேதி கால்பந்து கூட்டரங்கின் வாயிலாக விருதுகள் அனைத்தையும் வழங்க சர்வதேச காலபந்து கூட்டமைப்பு திட்டமிட்டுள்ளது.