இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் லீக் சுற்று இன்றுடன் நிறைவடைந்தது. இன்று நடைபெற்ற முதல் போட்டியில் எஃப்சி கோவா அணி- ஹைதராபாத் எஃப்சி அணியுடன் பலப்பரீட்சை நடத்தியது.
இப்போட்டியில் வெற்றிபெற்றால் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிவிடலாம் என்ற எண்ணத்துடன் களமிறங்கிய ஹைதராபாத் எஃப்சி அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஆனால் அதற்கு நிகரான ஆட்டத்தை எஃப்சி கோவா அணியும் வெளிப்படுத்தி அசத்தியது.
இதனால் ஆட்டநேர முடிவில் இரு அணிகளும் கோலேதுமின்றி போட்டியை டிராவில் முடித்தன. பின்னர் புள்ளிகள் அடிப்படையில் எஃப்சி கோவா அணி புள்ளிப்பட்டியலின் நான்காம் இடத்தை தக்கவைத்து, நடப்பாண்டு ஐஎஸ்எல் தொடரின் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது.
இன்று நடைபெற்ற மற்றொரு லீக் போட்டியில் மும்பை சிட்டி எஃப்சி அணி 2-0 என்ற கோல் கணக்கில் ஏடிகே மோகன் பாகன் அணியை வீழ்த்தி, நடப்பு சீசனின் லீக் வின்னராக தேர்ச்சி பெற்றது.
இதையும் படிங்க: டெஸ்ட் தரவரிசை: டாப் 3-இல் அஸ்வின், டாப் 10-இல் நுழைந்த ரோஹித்!