இந்தியன் சூப்பர் லீக் கால்பந்துத் தொடரின் ஏழாவது சீசன் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. இதில் நேற்று (ஜன.14) நடைபெற்ற லீக் ஆட்டத்தில் கோவா எஃப்சி அணி - ஜாம்ஷெட்பூர் எஃப்சி அணியை எதிர்கொண்டது.
போட்டி தொடங்கியது முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கோவா அணிக்கு மெண்டோசாவின் மூலம் 19ஆவது நிமிடத்தில் முதல் கோல் கிடைத்தது. இதனால் முதல் பாதி ஆட்டநேர முடிவில் கோவா எஃப்சி அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலைப் பெற்றது.
தொடர்ந்து நடைபெற்ற இரண்டாம் பாதி ஆட்டத்திலும் தனது அபாரத்திறனை வெளிப்படுத்திய மெண்டோசா ஆட்டத்தின் 52ஆவது நிமிடத்தில் கோவா அணிக்கு மீண்டும் ஒரு கோலை அடித்தார்.