தமிழ்நாடு

tamil nadu

எஃப்ஏ கோப்பை: நார்விச் சிட்டியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய மான்செஸ்டர் யுனைடெட்

By

Published : Jun 28, 2020, 4:44 PM IST

நார்விச் சிட்டி அணிக்கு எதிராக ஆடிய மான்செஸ்டர் யுனைடெட் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று எஃப்ஏ கோப்பைத் தொடரின் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியது.

fa-cup-manchester-united-beat-norwich-in-extra-time-to-reach-semi-finals
fa-cup-manchester-united-beat-norwich-in-extra-time-to-reach-semi-finals

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உள்ளூர் கால்பந்து தொடரான எஃப்ஏ கோப்பைத் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் நார்விச் சிட்டி அணியை எதிர்த்து பிரபலமான மான்செஸ்டெர் யுனைடெட் அணி ஆடியது.

இந்த ஆட்டத்தின் தொடக்கம் முதலே மான்செஸ்டர் யுனைடெட் அணி தனது ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஆனால் நார்விச் சிட்டி அணியின் டிஃபெண்டர்கள், மான்செஸ்டர் யுனைடெட் அணி வீரர்களை கோல் அடிக்கவிடாமல் தடுத்தனர். முதல் பாதி ஆட்டத்தின் முடிவில் இரு அணிகளும் கோல்கள் எதுவும் அடிக்கவில்லை.

இதையடுத்து நடந்த இரண்டாம் பாதியின் 51ஆவது நிமிடத்திலேயே மான்செஸ்டர் யுனைடெட் அணியின் ஒடியன் ஆட்டத்தின் முதல் கோலை அடித்து அசத்தினார். இதனைத் தொடர்ந்து 75ஆவது நிமிடத்தில் டோட் கான்ட்வெல் நார்விச் சிட்டி அணிக்காக கோல் அடிக்க இரு அணிகளும் 1-1 என்று கோல் கணக்கில் சமநிலையில் இருந்தன. இதனால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து கூடுதலாக வழங்கப்பட்ட நேரத்தின் 118ஆவது நிமிடத்தில் மான்செஸ்டர் அணியின் ஹாரி இரண்டாவது கோலை அடித்து அசத்தினார். இதனால் மான்செஸ்டர் யுனைடெட் அணி 2-1 என்ற கோல் கணக்கில் நார்விச் சிட்டி அணியை வீழ்த்தியது. இதன்மூலம் மான்செஸ்ட்ர் யுனைடெட் அணி எஃப்ஏ கோப்பைத் தொடரின் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

இதையும் படிங்க:'மகளிர் கிரிக்கெட்டுக்கு முதலீடு தேவை'- ஷிகா பாண்டே!

ABOUT THE AUTHOR

...view details