இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் உள்ளூர் கால்பந்து தொடரான எஃப்ஏ கோப்பைத் தொடர், அந்நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வந்தது. தற்போது இத்தொடரின் லீக் சுற்றுகள் முடிந்து இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
எஃப்ஏ கோப்பை: அரையிறுதி போட்டிகளுக்கான அட்டவணை வெளியீடு! - மன்செஸ்டர் சிட்டி
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உள்ளூர் கால்பந்து தொடரான எஃப்ஏ கோப்பைத் தொடரின் அரையிறுதிச் சுற்றுக்கான அட்டவணையை எஃப்ஏ கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
அதன்படி இத்தொடரின் காலிறுதிச் சுற்றில் செல்சி, மன்செஸ்டர் சிட்டி, அர்செனல், மன்செஸ்டர் யுனைடெட் அணிகள் வெற்றி பெற்று அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறின. இந்நிலையில் எஃப்ஏ கோப்பைத் தொடரின் அரையிறுதிச் சுற்றுக்கான தேதி மற்றும் அட்டவணையை போட்டி அமைப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர்.
அதன்படி ஜூலை 18ஆம் தேதி நடைபெறவுள்ள முதல் அரையிறுதிப் போட்டியில் மன்செஸ்டர் யுனைடெட் அணி, செல்சி அணியையும், ஜூலை 19ஆம் தேதி நடைபெறவுள்ள இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் மன்செஸ்டர் சிட்டி அணி, அர்செனல் அணியை எதிர்கொள்ளவுள்ளது. இந்த போட்டிகளும் கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பார்வையாளர்களின்றி நடைபெறும் என்றும் போட்டி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.