நெதர்லாந்தை சேர்ந்தவர் கால்பந்து வீரர் ஃபெர்ணான்டோ ரிக்சன். இவர், 1967ஆம் ஆண்டு ஜூலை 27இல் பிறந்தார். தடுப்புக்காட்ட வீரரான இவர், 2000 முதல் 2006ஆம் ஆண்டு வரை ஸ்காட்லாந்தின் ரேஞ்சர்ஸ் கால்பந்து கிளப் அணிக்காக 150க்கும் மேற்பட்ட போட்டிகளில் விளையாடினார். மேலும், இவர் நெதர்லாந்து கால்பந்து அணிக்காகவும் 12 போட்டிகளில் விளையாடினார்
இந்நிலையில், தான் இயக்க நரம்பணு நோயால் (motor neurone disease) பாதிக்கப்பட்டுள்ளதாக 2013ஆம் ஆண்டு அவர் தெரிவித்தார். இதையடுத்து, ஆறு ஆண்டுகளாக நரம்பணு நோயுடன் வாழ்ந்துவந்த ரிக்சன் இன்று உயிரிழந்ததாக ரேஞ்சர்ஸ் கால்பந்து அணி அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.