தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

யூரோ கால்பந்து: இத்தாலி அணி புதிய சாதனை - யூரோ கால்பந்து தகுதிச்சுற்றுப் போட்டி

யூரோ சாம்பியன்ஷிப் கால்பந்து தகுதிச் சுற்றுப்போட்டியில் அர்மேனியா அணியை வீழ்த்திய இத்தாலி அணி தொடர்ச்சியாக 11ஆவது வெற்றியை ருசித்துள்ளது.

Italy

By

Published : Nov 19, 2019, 5:46 PM IST

நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் UEFA யூரோ சாம்பியன்ஷிப் கால்பந்து தொடர் அடுத்தாண்டு நடைபெறுகிறது. இந்தத் தொடருக்கான தகுதிச் சுற்றுப் போட்டிகள் தற்போது நடைபெற்றுவருகின்றன. இதில் ஜே பிரிவில் நடைபெற்ற போட்டியில் இத்தாலி - அர்மேனியா அணிகள் மோதின. இப்போட்டியின் தொடக்கத்திலிருந்தே கோல் அடித்த இத்தாலி வீரர்கள் எதிரணியை திணறடித்தனர்.

இத்தாலி அணி வரிசையாக கோல் அடித்ததால் முதல் பாதியில் 4-0 என முன்னிலைப் பெற்றது. பின்னர் இரண்டாவது பாதி ஆட்டத்திலும் இத்தாலி அணியின் ஆதிக்கம் தொடர்ந்ததால் அந்த அணி 77ஆவது நிமிடத்தில் 8 கோல்களுடன் பலமான முன்னிலையில் இருந்தது. அப்போது அர்மேனியா வீரர் எட்கர் பாபயான் ஒரு கோல் மட்டும் அடித்தார்.

இறுதியில் இத்தாலி அணி 9-1 என்ற கோல் கணக்கில் அர்மேனியாவை அபாரமாக வீழ்த்தியது. இத்தாலி அணியில் அதிகபட்சமாக சிர்ரோ இம்மொபில், நிக்கோலோ ஜானியாலோ ஆகியோர் தலா இரண்டு கோல்கள் அடித்தனர். இந்த வெற்றியின் மூலம் ஜே பிரிவில் 30 புள்ளிகளுடன இத்தாலி அணி முதல் அணியாக தகுதிச் சுற்றை நிறைவு செய்தது.

மேலும் இத்தாலி அணி தொடர்ச்சியாக 11ஆவது வெற்றியை பதிவு செய்து புதிய சாதனையும் படைத்துள்ளது. முன்னதாக இத்தாலி அணி மூன்று முறை ஒன்பது கோல் அல்லது அதற்கு மேலாக அடித்துள்ளது.

இத்தாலி அணி 9 கோல் அல்லது அதற்கு மேல் அடித்த போட்டிகள்

  • 1920ஆம் ஆண்டு பிரான்ஸ் அணிக்கு எதிரான நட்பு ரீதியிலான போட்டியில் 9-4 என வெற்றி.
  • 1932ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் எகிப்து அணிக்கு எதிரான போட்டியில் 11-3 என வெற்றி.
  • 1948ஆம் ஆண்டு அமெரிக்காவுக்கு எதிரான போட்டியில் 9-0 என வெற்றி.
    ரோமானியாவை வீழ்த்திய ஸ்பெயின்

இதேபோன்று எஃப் பிரிவில் நடைபெற்ற போட்டியில் ஸ்பெயின் அணி 5-0 என்ற கோல் கணக்கில் ரோமானியாவை வீழ்த்தி யூரோ தொடருக்கு தகுதிபெற்றது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details