தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

யூரோ 2020 ரவுண்ட் அப்: ஏ பிரிவில் முதலிடம் பிடித்த இத்தாலி - யூரோ 2020 கால்பந்து செய்திகள்

2020 யூரோ கால்பந்து ஜூன் 20ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் இத்தாலி, சுவிட்சர்லாந்து ஆகிய அணிகள் வெற்றிபெற்றன.

Euro 2020
Euro 2020

By

Published : Jun 21, 2021, 6:34 AM IST

ஐரோப்பாவின் முன்னணி அணிகள் பங்கேற்கும் 2020 யூரோ கால்பந்து (Euro 2020) போட்டித் தொடர் தற்போது நடைபெற்றுவருகிறது. குரூப் ஏ பிரிவில் நேற்று (ஜூன் 20) நடைபெற்ற ஆட்டத்தில் இத்தாலி அணி வேல்ஸ் அணியை எதிர்கொண்டது.

தொடக்கம் முதலே அட்டாக்கிங் ஆட்டத்தை வெளிப்படுத்திய இத்தாலி அணிக்கு 39ஆவது நிமிடத்திலேயே பலன் கிட்டியது. நடுகள வீரரான மடயோ பெசினா அந்த அணிக்கு முதல் கோலை தேடித்தந்தார்.

இரண்டாவது பாதியில் இரு அணிகளும் கோலடிக்க மேற்கொண்ட எந்த முயற்சியும் எடுபடவில்லை. இறுதியில் 1-0 என்ற கணக்கில் இத்தாலி வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் இத்தாலி அணி ஏ பிரிவில் முதலிடத்தைப் பெற்றது.

குரூப்-ஏ பிரிவில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் சுவிட்சர்லாந்து அணி 3-1 என்ற கோல் கணக்கில் துருக்கி அணியை வென்றது.

இன்றைய ஆட்டங்கள் - ஜூன் 21

முதல் போட்டியில் உக்ரைன் அணி ஆஸ்திரியா அணியை எதிர்கொள்கிறது. இரண்டாவது போட்டியில் நெதர்லாந்து அணி அணி நார்த் மெசிடோனியா அணியையும், மூன்றாவது போட்டியில் ரஷ்யா டென்மார்க் அணியையும் எதிர்கொள்கிறது.

இதையும் படிங்க:உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: நியூசி., நிதான ஆட்டம்

ABOUT THE AUTHOR

...view details